/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகனங்களில் ஹைபீம் விளக்குகளால் கண்கள் பாதிப்பு: விபத்தில் சிக்கும் எதிரே வரும் வாகனங்கள்
/
வாகனங்களில் ஹைபீம் விளக்குகளால் கண்கள் பாதிப்பு: விபத்தில் சிக்கும் எதிரே வரும் வாகனங்கள்
வாகனங்களில் ஹைபீம் விளக்குகளால் கண்கள் பாதிப்பு: விபத்தில் சிக்கும் எதிரே வரும் வாகனங்கள்
வாகனங்களில் ஹைபீம் விளக்குகளால் கண்கள் பாதிப்பு: விபத்தில் சிக்கும் எதிரே வரும் வாகனங்கள்
ADDED : ஜன 22, 2024 04:35 AM
நரிக்குடி: மாவட்டத்தில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் ஹைபீம் விளக்குகளால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசுவதால் விபத்தில் சிக்குகின்றனர். ரோட்டோரங்களில் மிளிரும் விளக்குகள் சேதமடைந்தும், மாயமாகியும் உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகின்றனர்.
கார், டூவீலர்கள் அதிகரித்து வருகின்றன. தொழில் போட்டியால் நவீன தொழில்நுட்பங்களால் புதுப்புது வடிவங்களில் வாகனங்களை டிசைன் செய்வதோடு, முகப்பு விளக்குகளை மாற்றி அமைக்கின்றனர். இதில் கார்கள், டூவீலர்கள் எல்.இ.டி., எச்.ஐ.டி., ஹலஜன் விளக்குகள் பொருத்துகின்றனர். இவ்வகை விளக்குகள் அதிக ஆற்றல் கொண்டவை. போதாக்குறைக்கு வாகனங்களை அலங்கரிக்க கூடுதல் அலங்கார வண்ண விளக்குகளை பொருத்துகின்றனர். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசுகின்றன. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்து நடக்க வழி வகுக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாநில நெடுஞ்சாலை ரோடுகள் கட்டமைக்கப்படவில்லை. பெரும்பாலான ரோடுகளில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும் அவை போதிய மிளிரும் திறன் கொண்டிருப்பதில்லை. நாளடைவில் சேதம் அடைந்தும் விடுகின்றன.
அதேபோல் ரோட்டில் இருபுறங்களிலும் வெள்ளை, கோடு மஞ்சள் கோடு போடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு போடப்பட்டாலும், ரோட்டின் களைச்செடிகளும், மேவிய மண்ணும் மறைத்து விடுகின்றன.
இதனால் இரவு நேரங்களில் அதிக அளவிலான ஹைபீம் விளக்கு வெளிச்சத்தால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்பட்டு ரோட்டை விட்டு இறக்கி, தட்டு தடுமாறி ஓட்டி காயமடைகின்றனர். பெரும்பாலான டிரைவர்கள் ஹைபீம் விளக்குகளை எரிய விட்டு செல்கின்றனர். வெளிச்சத்தின் அளவை குறைத்து ஓட்ட டிரைவர்களுக்கு மனம் வரவில்லை.
எதிரே வருவோருக்கு கண்கள் பாதிப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தை மறந்து வாகனத்தை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மாவட்டத்தில் ஒரு தாலுகாவில் இருந்து மற்றொரு தாலுகாவிற்கு செல்லும் ரோடுகளில் மிளிரும் விளக்குகள் நல்ல முறையில் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ரோட்டின் இருபுறமும் கோடுகளை தெரியும் படி பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.