/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வசதிகள் மேம்படுத்தப்படும்
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வசதிகள் மேம்படுத்தப்படும்
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வசதிகள் மேம்படுத்தப்படும்
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வசதிகள் மேம்படுத்தப்படும்
ADDED : பிப் 16, 2024 04:41 AM

சிவகாசி: சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வசதிகள் மேம்படுத்தப்படும் என மாநில இ.எஸ்.ஐ., மருத்துவ அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனை1987 அக். 10 ல் 50 படுக்கை வசதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2000 ல் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 120 பேர்வரை வெளி நோயாளிகளாகவும் 50 பேர் வரை உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது மருத்துவ சேவை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குடும்பநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவம் ஆகியவை சிறப்பு டாக்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ வசதியும் உள்ளது.
மேலும் உயர்ரக ரத்தப் பரிசோதனை கருவிகள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, அல்ட்ரா சோனோகிராம், இ.சி.ஜி., லேப்ராஸ்கோப்பி உள்ளன. மாரடைப்பு வந்தால் அதற்கு உடனடியாக போட வேண்டிய மருந்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.
ஆனாலும் இங்கு கட்டடம் சேதம், செயல்படாத லிப்ட், டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மருத்துவமனை தள்ளாடியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து ஜன. 12 ல் மருத்துவமனை மேம்பாட்டு குழுவின் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் புதிய கட்டடங்கள் ,உபகரணங்கள், அதிகப்படியான பணியாளர்கள் தேவை குறித்து தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்காதது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையின் தேவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மாநில இ.எஸ்.ஐ., மருத்துவ அலுவலர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார் பின் அவர் கூறுகையில், ''இங்கு நுாறு படுக்கை வசதி கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டும் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இது குறித்து டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் வளர்ச்சி மேம்படுத்தப்படும், என்றார்.