ADDED : நவ 17, 2025 02:15 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மறவர் தெருவை சேர்ந்தவர் உடையராஜ், 29, இவர் சிங்கார தோப்பில் உள்ள தன் நண்பர் ராஜ்குமாரை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், விக்ரம், விமல், அழகர் ஆகியோர் உடைய ராஜனை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
இது குறித்து அவர் தனது நண்பருக்கு அலைபேசியில் தகவல் கூறியுள்ளார். அங்கு வந்த ராஜ்குமார் தகராறு செய்தவர்களிடம் கேட்ட போது அடிதடி ஏற்பட்டது. இதில் ராஜகுமாரை 4 பேர் அருவாளால் வெட்டியதில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவரது உறவினர் நாகராஜன் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் இருதரப்பை சேர்ந்த அழகர், 25, விமல், 22, விக்ரம், 23, மற்றும் விஜயராஜ், 19, மாரிச்சாமி, 19, ஆகிய 5 பேர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

