/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது
/
வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது
வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது
வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது
ADDED : ஜன 03, 2025 11:44 PM
விருதுநகர்:விருதுநகர் ஜீவா லாட்ஜில் நவ., 26 இரவு 11:00 மணிக்கு கோவை மாவட்டம் சின்னதடாகத்தை சேர்ந்த ராமு 42, என்பவர் கஸ்டம்சில் அதிகாரியாக இருப்பதாக அடையாள அட்டையை காண்பித்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை உள்ளது என அறை எடுத்து தங்கினார்.
நான்குமுறையும் ஒரே அறையை எடுத்து தங்கி பின் சென்றுள்ளார். டிச., 12 இரவு 11:00 மணிக்கு வந்து அறை எடுத்து தங்கினார். இதுவரை சரியாக வாடகை செலுத்தி வந்தவர், கடந்த 7 நாட்களாக வாடகை பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். ஜன., 2 காலை 6:00 மணிக்கு லாடஜ் ஊழியர்கள் வாடகை பணம் கேட்டதற்கு, ஏன்டா நான் ஒரு அரசு அதிகாரி. எங்கிட்டயே பணம் கேட்பியா. திரும்ப திரும்ப வாடகை பணம் கேட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.
லாட்ஜ் ஊழியர் அனிஸ்கனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராமுவை பரிசோதித்ததில் அடையாள அட்டை போலி என தெரிந்தது. அவரை கைது செய்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.