/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தைகளின் தின்பண்டங்களில் போலி 'எப்சாய்' உரிம எண்கள்
/
குழந்தைகளின் தின்பண்டங்களில் போலி 'எப்சாய்' உரிம எண்கள்
குழந்தைகளின் தின்பண்டங்களில் போலி 'எப்சாய்' உரிம எண்கள்
குழந்தைகளின் தின்பண்டங்களில் போலி 'எப்சாய்' உரிம எண்கள்
ADDED : டிச 17, 2024 03:24 AM
விருதுநகர்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகளின் தின்பண்டங்களில் போலி 'எப்சாய்' உரிம எண்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் உணவுப்பாதுகாப்பு துறையினர் ரெய்டு நடத்த வேண்டும்.
பள்ளிகள், வணிக வளாகங்கள், சிறு வணிக கடைகள் என பல்வேறு இடங்களில் விற்கப்படும் குழந்தைகள் தின்பண்டங்களில் ஒரிஜினலை போன்ற போலிகளும் அதிகம் உள்ளன. இவற்றில் ஒரு சிலர் உரிமம் பெற்று இயங்குகின்றனர். பலர் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமமான 'எப்சாய்' எண்களை போலியாக அச்சிட்டு விற்கின்றனர்.
யார் இதை பரிசோதிக்க போகின்றனர் என செய்யும் இவர்களுக்கு சொந்தமாக தொழில் அமைப்பு கிடையாது. குடிசை தொழில் போல நடத்தி தின்பண்டங்களை பொட்டலமிட்டு போலி 'எப்சாய்' எண்கள் கொண்ட லேபிள்களை தயாரிக்கின்றனர். இந்த கும்பல்களால் உணவு பொருட்கள் மீதான நம்பகத்தன்மை குறைகிறது.
இந்த தின்பண்டங்களை அதிகம் உண்பது கிராமப்புற ஏழை குழந்தைகள் தான். மேலும் குழந்தைகளை கவர செயற்கை நிறமூட்டுகின்றனர். அதற்கு அளவு ஏதும் பின்பற்றுவது கிடையாது.
இதனால் பாதிப்பு தான் ஏற்படுகிறது. தமிழகத்தில் செயற்கை நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்க கூடாது என்ற தடை உள்ளது. இதுவரை போலி 'எப்சாய்' எண்களை கொண்டு இயங்கும் கும்பல்கள் மீது உணவுப்பாதுகாப்புத்துறையின் கவனம் விழவில்லை.
லேபிள்களில் போலித்தன்மை காட்டும் நபர்கள், தின்பண்ட உற்பத்தியில் நேர்மையாக இருப்பார்களாக என்பதும் கேள்விக்குறி தான். எனவே இதை சரி செய்ய மாவட்டங்கள் தோறும் ரெய்டு நடத்தி போலி எப்சாய் உரிம எண்கள் உள்ள தயாரிப்புகளை பறிமுதல் செய்து, அதை விற்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

