/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
/
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
ADDED : அக் 19, 2025 02:31 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அணைத்தலை ஆற்று தரை பாலத்தை கடக்க முயன்ற விவசாயி, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியானார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 49.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் இவருக்கு விவசாய தோப்பு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தோப்பில் பணி முடிந்து, சகோதரர்கள் பாலகிருஷ்ணன், மகாதேவனுடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
டூ - வீலரை ராமச்சந்திரன் ஓட்டிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், அணைத்தலை ஆற்று தரைப்பாலத்தில் நீர்வரத்து அதிகரித்து இருந்தது.
வெள்ளம் அதிகமாவதற்கு முன் பாலத்தை கடந்து சென்று விடலாம் என, ஆற்றை கடந்த போது, காட்டாற்று வெள்ளத்தில் ராமச்சந்திரன் அடித்துச் செல்லப்பட்டார். சகோதரர்கள் தப்பினர்.
தீயணைப்பு துறையினர், மழை தொடர்ந்ததால் மீட்பு பணிகளை துவங்கினர். தீவிர தேடுதலுக்கு பின் மதியம், 12:45 மணிக்கு புதரில் சிக்கியிருந்த ராமச்சந்திரன் உடலை மீட்டனர். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.