ADDED : அக் 15, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பணன் 60. ஆடுகள் வளர்த்து வருகிறார்.
மழை பெய்ததால் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் இரை பறித்து போட வேப்ப மரத்தில் ஏறி கிளையை வெட்டினார். அப்போது மரத்தின் ஊடே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் அரிவாள் பட்டதில் மின்சாரம் தாக்கி மரத்தில் தொங்கிய நிலையில் இறந்தார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

