/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாயுடன் கள்ளத்தொடர்பு விவசாயி குத்திக்கொலை
/
தாயுடன் கள்ளத்தொடர்பு விவசாயி குத்திக்கொலை
ADDED : மார் 28, 2025 05:44 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விவசாயி ராஜேந்திரனை 37. கத்தியால் குத்தி கொலை செய்த மகன் பிரபாகரன் 18, நண்பன் ராஜாவை19, போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி கீழதுலுக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நேற்று முன்தினம் இரவு காட்டுப்பகுதிக்குள் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்தார். மல்லாங்கிணர் போலீசார் விசாரித்ததில், அதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமியுடன் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதை மகாலட்சுமி மகன் பிரபாகரன் 18, கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்பு தொடர்ந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், நண்பர் ராஜா 19, வுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் ராஜேந்திரனை 14 இடத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.