ADDED : அக் 20, 2026 05:46 PM

அ நிறம் | அளவு
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே விவசாயி கண்மாய் பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி 31, விவசாயி திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் தேடியதில் அறியனேரி கண்மாய் அருகே உடலில் வெட்டு காயங்களுடன் செல்வ கணபதியின் உடல் கிடந்தது.
போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
