/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் விவசாயிகள் அலைக்கழிப்பு
/
பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் விவசாயிகள் அலைக்கழிப்பு
பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் விவசாயிகள் அலைக்கழிப்பு
பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் விவசாயிகள் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 10, 2025 02:18 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்தவர்கள் என்னென்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என விரிவாக தெரிவிக்காததால் பெரும்பாலான விவசாயிகள் முறையான ஆவணங்கள் இல்லாததால் பதிவேற்றம் செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்பட்டனர்.
காரியாபட்டி பகுதியில் உள்ள பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. கிரைய பத்திர நகல்கள், வாரிசு சான்று, இறப்புச் சான்று, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அலுவலர்கள் கேட்டனர்.
இதில் பிறப்பு, வாரிசு சான்று இல்லாவிட்டாலும் பிற ஆவணங்களுடன் நில பட்டாக்களை வாரிசுதாரர்கள் பெயரில் மாற்றிக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அலுவலர்களால் இணையத்தில் கட்டணம் இன்றி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் பிரதமரின் விவசாய ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இப்பதிவுகள் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் நில உடமை விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தவணை பெற முடியும்.
விவசாயிகள் பலருக்கு வாரிசு சான்று, இறப்பு சான்று இல்லாததால் நில உடமை விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை. முகாம் ஏற்பாடு செய்தவர்கள் என்னென்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என விரிவாக தெரிவிக்காததால் பெரும்பாலான விவசாயிகள் முறையான ஆவணங்கள் இல்லாததால் பதிவேற்றம் செய்ய முடியாமல் வேதனையுடன் திரும்பினர்.
கலெக்டர் அறிவுறுத்தியதால் அவசர அவசரமாக முகாம் நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். தெளிவான விவரங்களை எடுத்துரைத்து, முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அதற்கான ஏற்பாடுகளை வருவாய்துறை அதிகாரிகள் விசாரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்குப்பின் முகாம் நடத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.