/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லி விதைப்பில் விவசாயிகள் தீவிரம்
/
மல்லி விதைப்பில் விவசாயிகள் தீவிரம்
ADDED : நவ 29, 2024 05:19 AM

சாத்துார்: சாத்துார் அருகே குலசேகரபுரத்தில் மல்லி விதை விதைப்பில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்துார் குலசேகரபுரம் அம்மாபட்டி ஏ. ராமலிங்கபுரம் சந்தையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்காச்சோளம், பருத்தி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். ஐப்பசி மாதத்தில் இப்பகுதியில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் மல்லி விதைத்து இருந்தனர். ஆனால் போதுமான மழை பெய்யாமல் போனதால் மல்லி செடி முளைக்கவில்லை. விதை முழுவதும் மக்கிப்போனதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர்.
தற்போது சாத்துார் சுற்று கிராமப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மீண்டும் உழவு செய்து மல்லி விதைத்து வருகின்றனர்.கார்த்திகை மாதம் என்பதால் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மல்லி விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.