/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மான், காட்டுப்பன்றியால் பாழாகும் பயிர்கள் விவசாயிகள் கவலை
/
மான், காட்டுப்பன்றியால் பாழாகும் பயிர்கள் விவசாயிகள் கவலை
மான், காட்டுப்பன்றியால் பாழாகும் பயிர்கள் விவசாயிகள் கவலை
மான், காட்டுப்பன்றியால் பாழாகும் பயிர்கள் விவசாயிகள் கவலை
ADDED : நவ 03, 2024 05:31 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னப்பரெட்டியப்பட்டி கண்மாய் முட்புதர்களில் மான், காட்டுப்பன்றிகள் அதிகளவில் வசிக்கின்றன. இவை நடவு செய்யப்பட்டுள்ள தக்காளி, வெண்டை ஆகிய பயிர்களை பாழாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்னப்பரெட்டியப்பட்டியில் 75 ஏக்கரில் தக்காளி, வெண்டை, புடலை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதால் தினமும் மார்கெட்டிற்கு கொண்டுச் சென்று விற்பனை செய்கின்றனர். இங்குள்ள வலையன்குளம் கண்மாய் துார்வாரி பல ஆண்டுகள் ஆவதால் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்த காடு போல மாறியுள்ளது.
இதில் 50க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. இவை மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுடன் சர்வ சாதாரணமாக மேய்கின்றன. நிலத்தை காலையில் இருந்து மாலை வரை விவசாயிகள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். ஆனால் இரவில் இருந்து அதிகாலை வரை மான்கள், காட்டுப்பன்றிகள் பயிர்களை மேய்ந்து பாழாக்கி வருகின்றன.
இதனால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து விட்டு தற்போது விளைச்சல் விலையாகும் நேரத்தில் பயிர்கள் பாழாவதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் மான்கள், காட்டுப்பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
கண்மாயை துார்வாரி முட்புதர்களை அகற்றினாலே மான்கள், காட்டுப்பன்றிகளின் தாக்குதல் குறைந்து விடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.