/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அர்ஜுனா நதியில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : மார் 04, 2024 04:54 AM

சிவகாசி; சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் இருந்து வடமலாபுரம் பகுதி வழியாக செல்லும் அர்ஜூனா நதியில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளதால் மழை பெய்தும் பயனில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே காளையார்குறிச்சி, எம்.புதுப்பட்டி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக அர்ஜூனா நதி செல்கிறது. இதனை நம்பி 2000 ஏக்கரில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
ஆனால் நதி முழுவதுமே சீமை கருவேல மரங்கள், கோரைப் புற்கள் அதிகளவில் இடைவெளியின்றி ஆக்கிரமித்துள்ளது. மழை பெய்தால் அர்ஜுனா நதி வழியாக ஆணைக்குட்டம் அணைக்கு தண்ணீர் வரும். மேலும் இங்கிருந்து அர்ஜுனா நதி வடமலாபுரம் வழியாக கோலார்பட்டி அணை, இருக்கன்குடி அணைக்கு செல்கின்றது.
இப்பகுதியில் உள்ள அர்ஜுனா நதி முழுவதுமே சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. இதனால் மழை பெய்தும் தண்ணீர் ஓடிச் செல்ல வழி இல்லை. தவிர போர்வேல் அமைத்து விவசாயம் செய்யவும் வழியில்லை. எனவே அர்ஜூனா நதியை துார்வாரி, சீமைக் கருவேல மரங்கள், கோரைப் புற்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.