/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிர்களுக்கு காப்பீடு பணம் பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
/
பயிர்களுக்கு காப்பீடு பணம் பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
பயிர்களுக்கு காப்பீடு பணம் பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
பயிர்களுக்கு காப்பீடு பணம் பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
ADDED : அக் 06, 2024 04:49 AM
திருச்சுழி : திருச்சுழி பகுதியில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தும், ஒரு ஆண்டாக இன்சூரன்ஸ் பணம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே பரளச்சி உட்பட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மக்காச்சோளம் சோளம் நவதானிய பயிர்கள் உட்பட பயிர் செய்தனர்.
கடந்த ஆண்டு கன மழை காரணமாக பல கிராமங்களில் பயிர் செய்யப்பட்ட நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து பயிர்கள் பழாகிவிட்டது கண்மாய்கள் உடைப்பு காரணமாக விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. விவசாயிகள் பயிர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து உள்ளனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.
இது குறித்து விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமபாண்டியன்:
பரளச்சி பகுதிகளில் உளுந்து, மக்காச்சோளம் உட்பட பயிர்களுக்கு சென்ற ஆண்டு இன்சூரன்ஸ் செலுத்தி பயிர் காப்பீடு செய்துள்ளனர். கன மழை காரணமாக பயிர்கள் பாழாகி விட்டது. மக்காச்சோள பாதிப்புகளுக்கு அந்தந்த பிர்க்கா முழுமைக்கும் நிவாரணம் பொருந்தும் என இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு விவசாயத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதில் ஒரு சில கிராம மக்களுக்கு மட்டும் இன்சூரன்ஸ் தொகை வந்துள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஆனால் அதற்குரிய உத்தரவாத கடிதம் தரப்படவில்லை. பேருக்கு நிவாரணம் வரும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. மக்காச்சோளம் தவிர நவதானிய பயிர்களுக்கும் அனைத்து நிலைகளிலும் நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வலியுறுத்த வேண்டும்.