/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்
/
போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்
போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்
போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்
ADDED : டிச 09, 2024 05:01 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் போதுமான மழை இல்லாததால் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களில் புழுக்கள் பயிர்களை தின்பதால் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
அருப்புக்கோட்டையில் விருதுநகர் ரோடு, புளியம்பட்டி பகுதிகளில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் பருத்தி, சோளம் உட்பட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பயிர்கள் நன்கு விளைந்த நிலையில், தற்போது தற்போது மழை தேவையாக உள்ளது. மற்ற ஊர்களில் பெய்யும் கனமழை அருப்புக்கோட்டை பகுதிகளில் மட்டும் சாரல் மழையாகவும், குறைவாக பெய்ததால் விவசாயத்திற்கு பயனற்றதாக உள்ளது.
கனமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கும் நிலையில், வளர்த்துள்ள மக்காசோள பயிர்களில் புழுக்கள் வந்து பயிரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்று வருகின்றன. இந்த நேரத்தில் மழை பெய்தால் பயிர்களில் உள்ள புழுக்கள் உதிர்ந்து விடும். மழை பொய்த்து போனதால் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.
விவசாயிகள் கூறுகையில்: கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். மான்கள், காட்டுப்பன்றிகள், வெட்டிக் கிளிகள் இவற்றில் இருந்து பயிர்களை காப்பாற்றி கொண்டு வருவதற்குள் மழை இல்லாமல் போனதால், பயிர்களை புழுக்கள் தாக்கி அழிக்கின்றன என, வேதனையோடு புலம்புகின்றனர்.