/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு முறை விதைத்தும் முளைக்காத மக்காச்சோளத்தால் விவசாயிகள் கவலை
/
இரு முறை விதைத்தும் முளைக்காத மக்காச்சோளத்தால் விவசாயிகள் கவலை
இரு முறை விதைத்தும் முளைக்காத மக்காச்சோளத்தால் விவசாயிகள் கவலை
இரு முறை விதைத்தும் முளைக்காத மக்காச்சோளத்தால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 30, 2024 04:51 AM
சாத்துார்: சாத்துார் பகுதி மக்காச்சோள விவசாயிகள் 2 முறை விதை விதைத்தும் மழை பெய்யாததால் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எம். நாகலாபுரம், என். மேட்டுப்பட்டி, பாப்பாகுடி, நென்மேனி . மாயூர் நாதபுரம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். அக்டோபர் மாதம்பருவ மழை காலம் தொடர்ந்து மழை பெய்தால் மக்காச்சோளம் நன்றாக விளையும் என்ற எண்ணத்தில் இந்த பகுதி விவசாயிகள் அக்.12 ல் விதை நட்டனர்.
தொடர்ந்து 4நாட்களுக்கு மழை பெய்யாமல் போனதால் ஏற்கனவே போட்ட விதை முளைக்காமல் போனது.இந்த நிலையில் இந்தப் பகுதி விவசாயிகள் விதை முளைக்காமல் போன நிலத்தில் அக்.16ல் மீண்டும் விதை விதைத்தனர்.
தற்போது வரை இந்த பகுதியில் பருவ மழை பெய்யவில்லை. தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது.இரண்டு முறை விதை வாங்கி விதைத்தும் மக்காச்சோளத்திற்கு தேவையான மழை பெய்யாததால் விதை முளைக்காமல் உள்ளது. பட்டம் தவறிய நிலையில் மக்காச்சோளத்தை நம்பி கடன் வாங்கி விவசாய பணிகளை செய்த விவசாயிகள் இனி என்ன செய்வது என தெரியாது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.