/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாஸ்தா கோவில் அணையில் குறைந்து வரும் நீர்வரத்து விவசாயிகள் கவலை
/
சாஸ்தா கோவில் அணையில் குறைந்து வரும் நீர்வரத்து விவசாயிகள் கவலை
சாஸ்தா கோவில் அணையில் குறைந்து வரும் நீர்வரத்து விவசாயிகள் கவலை
சாஸ்தா கோவில் அணையில் குறைந்து வரும் நீர்வரத்து விவசாயிகள் கவலை
ADDED : டிச 06, 2024 05:10 AM

சேத்துார்: தேவதானம் சாஸ்தா கோயில் நீர் தேக்கம் தண்ணீர் குறைவு காரணமாக சுற்றியுள்ள கண்மாய்களில் நீர் நிரம்பாமல் நெல் சாகுபடி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நகரி ஆற்றின் குறுக்கே 33 அடி உயரம் கொண்ட சாஸ்தா கோவில் நீர் தேக்கம் உள்ளது. இதன் மூலம் தேவதானம், நகரக் குளம், பெரியகுளம் சேத்தூர் வாழவந்தான் கண்மாய் உள்ளிட்ட பெரிய கண்மாய்களும் இதனை அடுத்து வாண்டையார் குளம், முகவூர் குளம் உள்பட 11 கண்மாய்களும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன.
நீர் வரத்துக்கு ஆதாரமான சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் கடந்த மாதம் மழையால் நிரம்பி நவ.18 முதல் ஏழு நாட்கள் மட்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து 48 நாட்களுக்கு திறக்க அறிவிப்பு இருந்தும் தொடர் மழை இல்லாததால் முதலில் உள்ள கண்மாய்களுக்கு நீர் சென்று நிரம்பவில்லை. பெரிய கண்மாய்களில் மண் அள்ளப்பட்ட பள்ளங்களில் மட்டும் நீர் தேங்கியுள்ளது.
தற்போது நெல் சாகுபடிக்கான ஒரு மாதம் தண்ணீர் தேவை உள்ள நிலையில் பாதி அளவு கூட கண்மாயில் நீர் இல்லை. தேங்கி உள்ள நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது. கண்மாய் பாசனத்தை நம்பி நடவு செய்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இது குறித்து விவசாயி கணேசன்: நீர் தேக்கத்தில் 7 நாட்கள் மட்டும் தண்ணீர் திறப்பு இருந்தது. இம்முறை எதிர்பார்த்த பருவ மழை பொய்த்து உள்ளதால் கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும். வருண பகவானை நம்பி உள்ளோம்.