/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இன்சூரன்ஸ் கம்பெனியை எதிர்த்து போராட விவசாயிகள் முடிவு
/
இன்சூரன்ஸ் கம்பெனியை எதிர்த்து போராட விவசாயிகள் முடிவு
இன்சூரன்ஸ் கம்பெனியை எதிர்த்து போராட விவசாயிகள் முடிவு
இன்சூரன்ஸ் கம்பெனியை எதிர்த்து போராட விவசாயிகள் முடிவு
ADDED : ஜூலை 29, 2025 12:12 AM
நரிக்குடி: பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி இன்சூரன்ஸ் கம்பெனியை எதிர்த்து விவசாயிகள் சங்கம் போராட தீர்மானம் நிறைவேற்றியது.
நரிக்குடி இருஞ்சிறையில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சுரேஷ் வரவேற்றார்.
நரிக்குடி பகுதியில் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும். நடப்பாண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 800 முதல் ரூ. ஆயிரம் வரை செலவழித்து பயிர் காப்பீடு செய்த நிலையில் பல லட்சங்களை வசூலித்து விவசாயிகளை ஏமாற்றிய இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 250 முதல் ரூ. 300 வரை சொற்ப நிவாரணத்தை அறிவித்தது ஏமாற்றியது. இருமுறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பயிர்க் காப்பீடு செய்த ஆவணத்துடன் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி, நரிக்குடி வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.