/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீரோடையை ஆக்கிரமித்து ரோடு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
/
நீரோடையை ஆக்கிரமித்து ரோடு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
நீரோடையை ஆக்கிரமித்து ரோடு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
நீரோடையை ஆக்கிரமித்து ரோடு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 05, 2024 05:43 AM
விருதுநகர் : அருப்புக்கோட்டை வில்லிபத்திரியை சேர்ந்த மக்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:
எங்கள் கிராம நீரோடையை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு செய்து ரோடு போடுகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே கிராமத்தினர் பி.டி.ஓ., தாசில்தாருக்கு பதிவுத்தபால் மூலம் நேரடியாக மனு அளித்திருந்தோம்.
எங்களுக்கு ஆதரவாக வார்டு உறுப்பினர்கள் முத்துலெட்சுமி, வசந்தக்குமார், தெய்வேந்திரன், மகேஸ்வரி ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். இருப்பினும் தற்போது வரை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படவில்லை. ஊராட்சி சார்பில் ரோடு போடும் பணி நடக்கிறது.
நீரோடை குறுகி உள்ளதால் மழைக்காலத்தில் பக்கத்து கிராமங்களான சின்ன வள்ளிக்குளம், பெரிய கிராமங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பது குறையும்.
எனவே வி.ஏ.ஓ., சர்வேயரை கொண்டு நில அளவை சரிபார்த்து ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுப்புற விவசாயிகளின் உயிர் நாடியாக உள்ள நீரோடையை மீட்டு தர வேண்டும், என கேட்டுள்ளனர்.

