/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 17, 2024 03:22 AM
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் கண்மாய் நிறைந்து விவசாய பணிகள் துவங்க உள்ள நிலையில் பயிர் காப்பீட்டு திட்ட காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி பகுதியில் பருவ மழைக்கு ஏராளமான விவசாயிகள் நெல் நடவு செய்தனர். பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயனடைய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு, டிச.16 வரை காலக்கெடு இருந்தது. இதில் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தனர். பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பிய போதும், நரிக்குடி பகுதியில் போதிய மழை இன்றி நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது.
தற்போது புயல் காரணமாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. இதனால் சாய்வான நெற்பயிர்களை அழித்துவிட்டு, மீண்டும் நெல் நடவு செய்ய விவசாயிகள் தீவிரமாகி வருகின்றனர். ஏற்கனவே பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் காப்பீடு வழங்க வேண்டும்.
தற்போது செய்யப் போகும் விவசாயத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்தில் சேர ஒரு மாதத்திற்கு கூடுதலாக காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மச்சேஸ்வரன், மாநில துணைத்தலைவர், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கட்டனூர்:
நரிக்குடி பகுதியில் பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீடு வழங்க வேண்டும். தற்போது நல்ல மழை பெய்து, நீர் நிலைகள் நிரம்பியதால், விவசாயத்தை தொடங்க உள்ளனர். டிச. 16ல் பயிர் காப்பீடு காலக்கெடு முடிவடைகிறது. தற்போது விவசாயத்தை துவங்கும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் பாதிக்கக் கூடும். பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயனடைய ஏதுவாக ஒரு மாதம் கூடுதலாக காலக்கெடுவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.