/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 23, 2025 12:21 AM
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் தொடரும் சாரல் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து தென்காசி ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க வேண்டும் ,என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையத்தை சுற்றியுள்ள புளியங்குளம், புதுக்குளம், கடம்பன் குளம், கொண்டனேரி, அலப்பசேரி, ஆதியூர் உள்ளிட்ட கண்மாய்களில் பல நுாறு ஏக்கர் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
விளை பொருளுக்கு தகுந்த விலை கிடைக்கவும், விளைந்த நெல்லை வியாபாரிகளிடம் விற்று பணம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை போக்கவும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாரியம்மன் கோயில் அருகே ஜூன் 16ல் துவக்கியது.
தற்போது சுற்றியுள்ள கண்மாய் வாசனை பகுதிகளில் அறுவடை பணிகள் பாதி அளவிற்கு முடிந்துள்ள நிலையில் சாரல் மழை பெய்து வருவதால் அறுவடை பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே அரசு சார்பில் நெல் கொள்முதலை ஆக. 15 வரை நீட்டிப்பதுடன் அறுவடை நெல்லை மழையிலிருந்து நனையாமல் பாதுகாக்க தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.