sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாய் கரைகள், மடைகளை விரைவில் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

கண்மாய் கரைகள், மடைகளை விரைவில் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

கண்மாய் கரைகள், மடைகளை விரைவில் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

கண்மாய் கரைகள், மடைகளை விரைவில் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : அக் 18, 2024 04:48 AM

Google News

ADDED : அக் 18, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம் மிளகாய், பாசி வாழை, கரும்பு, கத்தரி பருத்தி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இவற்றில் பெரும்பான்மையான பயிர்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே பயிரிடப்படுகின்றது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்கள் 342, ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் 712 உள்ளன. சில மாதங்களுக்கு முன் பெய்த கோடை மழையில் பெரும்பான்மையான கண்மாய்களுக்கு தண்ணீர் வந்துள்ளது.

ஆனால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனெனில் பெரும்பான்மையான கண்மாய்களில் கரை பலவீனமாக உள்ளதாலும், மடைகள் சேதம் அடைந்து இருப்பதாலும் தண்ணீர் தேங்காமல் வீணாக வெளியேறி விடுகின்றது.

கடந்த காலங்களில் சிவகாசி அருகில் ஜமீன் சல்வார் பட்டி கண்மாயில் இரு மடைகளுமே சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறியது. விருதுநகர் செங்குன்றாபுரம் கண்மாயில் மடைகள் சேதத்தாலும், மல்லாங்கிணர் கண்மாயில் மடைகள் சேதத்தாலும் தண்ணீர் வந்தும் வீணாக வெளியேறிவிட்டது.

இதுதான் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான கண்மாய்களின் நிலை. இதனால் மழை பெய்தும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுவதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

மேலும் ஒரு சில கண்மாய்களின் கரைகள் உடைந்து தண்ணீர் விவசாய நிலத்திற்குள் பாய்வதால் பயிர்களும் அழிந்து விடுகின்றது. கண்மாய்களில் கரைகள் உடையும்போதும், மடைகள் சேதம் அடையும்போது அதிகாரிகளால் தற்காலிகமாக சரி செய்யப்படுகின்றதே தவிர நிரந்தரமாக சரி செய்யப்படுவதில்லை.

இதுகுறித்து பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கரை பலவீனமான கண்மாய்கள், சேதம் அடைந்த மடைகள் குறித்து ஆய்வு செய்து பருவமழை தீவிரமடைவதற்கு முன் உடனடியாக சரி செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி, அக். 18-

மாவட்டத்தில் கண்மாய்களில் மடை சேதத்தாலும், கரை உடைந்திருப்பதாலும் மழை நீர் வீணாக வாய்ப்புள்ளது. பருவ மழை தீவிரமடைவதற்குள் விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கும் வகையில் கண்மாய் கரைகள், மடைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us