/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காயல்குடி ஆற்றை துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
காயல்குடி ஆற்றை துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 20, 2025 04:37 AM
ஸ்ரீவில்லிபுத்துார் :   ராஜபாளையத்தில் துவங்கி ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவின் பல்வேறு கிராமங்கள் வழியாக பயணிக்கும் காயல்குடி ஆற்றை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர்,  கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி, வைத்திலிங்கபுரம், துலுக்கன்குளம்,  கங்கா குளம், கன்னார்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, பிள்ளையார் குளம் வழியாக சிவகாசி தாலுகா பகுதி நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக வெம்பக்கோட்டை அணை வரை  பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் வழித்தட கிராமங்களில் உள்ள பல்வேறு கண்மாய்கள் நிரம்பி ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வந்தன. தற்போது இந்த காயல்படி ஆற்றில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும், பஞ்சாலை கழிவுகள் கொட்டப்பட்டும், கிராமங்களின் கழிவு நீர் ஓடையாகவும், ஆற்றின் இருபுறமும் உள்ள காலியிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுகிறது.
இதனை முழு அளவில் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்தால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதி விவசாய நிலங்கள் பயனடையும்.  இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வழித்தட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

