/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்
/
செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்
செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்
செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்
ADDED : பிப் 03, 2024 06:10 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மாலை நேரங்களில் விவசாயிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர வேறு வழியாக வனப் பகுதியில் செல்லக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் சில வாரங்களாக மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் மாலை நேரங்களில் வயல்களுக்கு செல்லும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஒரு சில தோப்புகளில் தென்னை, மா போன்ற மரங்களை யானைகள் சேதப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே அளவுக்கு அதிகமாக மழை பெய்து மா பூப்பது தாமதமாகி வரும் நிலையில் தற்போது யானைகள் நடமாட்டத்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் கார்த்திக் கூறியதாவது;
செண்பகத் தோப்பில் மாலை நேரங்களில் யானைகள் நடமாடுவதை கண்டறியப்பட்டுள்ளது. எனவே , மாலை நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தாண்டி வேறு பகுதியில் விவசாயிகளோ, பொதுமக்களோ செல்வதை தவிர்க்க வேண்டும். வனத்துறையின் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதாக விவசாயிகள் தரப்பில் எந்தவித புகார்களும் வரவில்லை என்றார்.

