/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
/
விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 30, 2025 06:21 AM
விருதுநகர்: விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், துணை செயலாளர் ராமமூர்த்தி, வச்சக்காரப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தனர். விருதுநகர் ஒன்றியத் தலைவராக காளிமுத்து, செயலாளராக முருகேசன், பொருளாளராக பெரியசாமி, துணைத் தலைவர்களாக கண்ணாயிரம், ராசு, துணை செயலாளர்களாக சின்னசாமி, சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவராக ராமச்சந்திரன் தங்கசாமி புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
அர்ஜூனா ஆற்றை துார்வாரி கருவேல மரங்களை அகற்ற வேண்டும். காட்டுப் பன்றிகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆர்.ஆர்.நகர் நான்குவழிச் சாலை கிழக்கு பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். பிப். 11ல் மதுரையில் நடக்கும் தென்மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

