/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவுநீர்
/
செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவுநீர்
செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவுநீர்
செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவுநீர்
ADDED : டிச 30, 2025 06:21 AM
சேத்துார்: செயல்படாத குடிநீர் தொட்டி, குடியிருப்பை சூழும் கழிவுநீர், மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல சிரமம், குடியிருப்பை சூழும் கழிவு நீர், குண்டும் குழியுமான ரோடு உட்பட பல்வேறு பிரச்சனைகளால் கணபதி சுந்தர நாச்சியார்புரம் ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமம், இந்திரா நகர், சோலைசேரி அருகே அம்மன் நகர் என குடியிருப்புகளை கொண்டுள்ளது. கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே ஊரணி நிறைந்ததால் பள்ளி முன்பு உள்ள பாலத்தை உடைத்து ஓடையை மூன்று மாதங்களுக்கு முன் அகலப்படுத்தினர்.
மீண்டும் தரைப்பாலம் அமைக்காததால் இவ்வழியே செல்லும் 50க்கும் அதிகமான குடியிருப்பினர், பள்ளி மாணவர்கள், நுாலகத்திற்கு செல்வோர் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். தெருக்கள் அனைத்தும் தோண்டப்பட்டு புதிய ரோடு பணிகள் நடைபெறவில்லை. தாமிரபரணி குடிநீர் குழாய் காட்சி பொருளாக உள்ளதுடன் உவர்ப்பான தண்ணீரே சப்ளை ஆகிறது. குடிநீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கின்றனர்.
குடியிருப்புகளில் சுற்றி திரியும் நாய்கள் தொல்லையால் இரவு நேரங்களில் தனியாக செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது. குளியல் தொட்டி, மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி இரண்டும் செயல்பாடின்றி உள்ளது. ஊராட்சியில் சேரும் குப்பை முறையாக மறுசுழற்சி செய்யாமல் ஒதுக்குப்புறத்தில் போட்டு தீ வைக்கின்றனர். குப்பை குழியும், மண்புழு உரக்குடிலும் செயல்பட வில்லை.

