/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் வத்தல், மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைப்பது எப்போது? விரைவுபடுத்த எதிர்பார்க்கும் விவசாயிகள்

UPDATED : ஜன 17, 2025 07:05 AM
ADDED : ஜன 17, 2025 12:41 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் விளையும் பஞ்சவர்ணம் மாம்பழம், விருதுநகர் வத்தல், அதலக்காய், கொடுக்காப்புளி ஆகிய விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 2 ஆண்டுகளாக முயற்சி நடந்து வருகிறது. இதை விரைவுபடுத்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் அதிகளவில் பஞ்சவர்ணம் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பழம் இனிப்பாக இருப்பதுடன் இருப்பு வைத்திருக்கும் போது தோல் காய்ந்திருப்பது போல் தெரிந்தாலும் பழம் புத்துணர்வுடனே இருக்கும். இதே போல் விருதுநகரின் கிராமப்பகுதிகளில் தானாகவே முளைக்கும் அதலக்காய் நீரிழிவுக்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. குறிப்பிட்ட சீசன்களில் மட்டும் கிடைக்கும் இதை பலரும் விருப்பத்துடன் வாங்கி உணவில் சேர்க்கின்றனர்.
விருதுநகர் தாதம்பட்டியில் கொடுக்காப்புளி மரங்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து மே மாதம் தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு கொடுக்காப்புளி விற்பனையாகிறது.
வத்தலுக்கும் வத்தல் வியாபாரிகள் சார்பில் சான்றொப்பம் அளிக்கப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இந்த நான்கு விளைபொருட்களும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் புவிசார் குறியீடு பெறுவதற்கு 2022ல் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
புவிசார் குறியீடை விரைந்து அறிவித்தால் இதை சாகுபடி செய்யும் விவசாயிகள் நம்பிக்கை பெறுவர். ஏராளமான பலன்களை பெற்று சாகுபடி அதிகரிக்கும்.