/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பயன்பாட்டிற்கு வந்தது உழவர் சந்தை
/
சிவகாசியில் பயன்பாட்டிற்கு வந்தது உழவர் சந்தை
ADDED : செப் 27, 2025 03:46 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் வியாபாரிகள் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசியில் உழவர் சந்தையில் 54 கடைகள், காய்கறி இருப்பு அறை, தகவல் மையம், அலுவலகம் உள்ளது. துவக்கத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்கள் விளை பொருட்களை இங்கு விற்பனை செய்தனர்.
நாளடைவில் உழவர் சந்தை முழுமையாக செயல்படவில்லை.
2022--23 நிதி ஆண்டில் ரூ. 33.25 லட்சத்தில் உழவர் சந்தை மறு சீரமைப்பு செய்யப்பட்டும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
எதிரொலியாக நேற்று உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அசோகன் எம். எல். ஏ .,மேயர் சங்கீதா ,கமிஷனர் சரவணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் அம்சவேணி, வார்டு கவுன்சிலர் ராஜேஷ், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அய்யப்பன் துவக்கி வைத்தனர்.
இதனால் மக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கமிஷ்னர் கூறுகையில், நகரில் சிவன் கோயில் பகுதி, காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்கறி கடை உரிமையாளர்களிடம் பேசி உழவர் சந்தையில் கடை வைக்க அறிவுறுத்தப்பட்டது. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும், என்றார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கூறுகையில், உழவர் சந்தையில் காய்கறி கடைகள் வைக்கப்பட்ட உடனே மக்கள் தேடி வந்து பொருட்களை வாங்குகின்றனர். மீதமுள்ள கடைகள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், என்றார்.