நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடியில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், இளங்கோவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தில் விடுபட்ட கண்மாய்களை இணைத்து முழுமையாக செயல்படுத்த வேண்டும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.
பயிர் காப்பீடு, வறட்சி நிவாரணம் வேண்டி ஆக.18 ல் நரிக்குடி பஸ் ஸ்டாண்ட் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய நிர்வாகிகள் தமிழரசன், சரவணன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.