/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சப் கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு
/
சப் கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு
சப் கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு
சப் கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : நவ 12, 2025 12:15 AM
சிவகாசி: சிவகாசியில் சப் கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் மாதம்தோறும் இரண்டாவது செவ்வாய் கிழமை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு விவசாயிகள் வந்தனர். ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா நடந்ததால் சப் கலெக்டர் முகமது இர்பான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மற்ற அதிகாரிகள் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சப் கலெக்டர் தலைமையில் தான் கூட்டம் நடத்த வேண்டும் என கூறிய விவசாயிகள், ஒத்தி வைத்து விட்டு, கூட்டத்தை வேறொரு நாளில் நடத்த வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.