/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அமைச்சர் வீட்டின் முன்பு ஏப். 12ல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ADDED : ஏப் 02, 2025 05:32 AM
விருதுநகர் : அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வீட்டின் முன்பு ஏப். 12ல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகாசியை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறைகள் செயல்படுகிறது. ஆமத்துாரில் தனியார் நிறுவனம் நீர்நிலைகள், வண்டிப்பாதைகளை ஆக்கிரமித்துள்ளதை மீட்க பலமுறை போராடியும் மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
மாவட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் இருந்தும் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்தபாடில்லை. எனவே அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பதவி விலக கோரியும், கலெக்டர் ஜெயசீலன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வீட்டின் முன்பு ஏப். 12ல் விவசாய சங்கங்கள் கூட்டாக இணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.