/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
சாத்துாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 22, 2025 05:59 AM
சாத்துார்: சாத்துார் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகாசி ஆமத்துார் அருகே வீர செல்லையாபுரம் கிராமத்தில் வயற்காட்டிற்கான இரண்டு நீர் வரத்து ஓடையையும் ஒரு நீர் வழி வண்டிப் பாதையையும் தனியார் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் விஷம் குடித்து விடுவோம் என கூறியதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்த விஷ பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
விவசாய சங்கத்தினருடன் ஆர்.டி.ஓ. சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.