ADDED : ஜூலை 17, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழக விவசாயி சங்கம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் விவசாயிகள் சார்பில், தமிழக அரசு கூட்டுறவுத் துறையில் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன் அனைத்து கடன்களுக்கும் சிபில் ஸ்கோர் சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதியை தடை செய்ய கோரியும், பல ஆண்டு காலமாக விவசாயிகள் நில உடமை, அனைத்து சான்றிதழ் பெற்று கொண்டு எப்போதும் போல் பயிர் கடன், கடன்கள் காலதாமதம் இன்றி வழங்க வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தார், முன்னாள் துணைத் தலைவர் அம்மையப்பன், முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் விஜய முருகன் பேசினர்.