ADDED : ஆக 01, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சொந்தமான 129 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைப்பதற்கு கையகப்படுத்தக் கூடாது, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தபடி மதுரையில் வேளாண் பல்கலை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென் மண்டல தலைவர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். மதுரை மண்டல செயலாளர் உறங்காப்புலி, தலைவர் மதுரை வீரன், கவுரவத் தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பி. ஆர்.பாண்டியன் பேசினார். ஒருங்கிணைப்பு குழுவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.