ADDED : அக் 14, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றியை நாட்டு நாய்களை வைத்து விரட்டும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும்,பயிர் காப்பீட்டில் குளறுபடியை சரி செய்ய வலியுறுத்தியும் விருதுநகரில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்து பேசுகையில், வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த அரசு தவறுகிறது. வேட்டை நாய் வைத்து தடுத்த விவசாயிகளுக்கு மீது பொய் வழக்கு போடுவது நியாயமில்லை. இதை கண்டித்து மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம், என்றார். மாநில பொருளாளர் சுப்பாராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கரன், நாட்டு நாய் வளர்ப்போர் சங்க காளிராஜ் பங்கேற்றனர்.