/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரும்புக்கு பயிர்க்காப்பீடு கோரும் விவசாயிகள்
/
கரும்புக்கு பயிர்க்காப்பீடு கோரும் விவசாயிகள்
ADDED : ஜன 21, 2025 05:20 AM
விருதுநகர்: விருதுநகரில் நடந்த விவசாயிகள் முத்தரப்பு கூட்டத்தில் கரும்புக்கு பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கான அரைவை கொள்முதல் தொடர்பான முத்தரப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசீலன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த கூட்டத்தில் 2018, 2019 ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து பாழாகி விட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதனால் அரசு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமோ, தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடனோ கரும்பு பயிர் காப்பீடு திட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.