/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான கதிரடிக்கும் களம் விவசாயிகள் அவதி
/
சேதமான கதிரடிக்கும் களம் விவசாயிகள் அவதி
ADDED : செப் 22, 2025 03:18 AM

சிவகாசி : சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கதிரடிக்கும் களம் சேதமடைந்திருப்பதால் விவசாயிகள் பயிர்களை பிரித்தெடுக்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் விவசாயிகள் பயிரிடுகின்றனர். அறுவடை காலங்களில் பயிர்களை காய வைத்து பிரித்தெடுப்பதற்காக ஊராட்சி அலுவலகம் அருகே இரு கதிரடிக்கும் களங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இரு களங்களுமே சேதம் அடைந்துள்ளது. இதில் செடிகள் முளைத்து பயன்படுத்த முடியவில்லை.
மேலும் திறந்தவெளி பாராகவும் மாறி வருகின்றது. இதனால் விவசாயிகள் பயிர்களை பிரித்து எடுப்பதற்கு இடம் இன்றி சிரமப்படுகின்றனர்.
எனவே இங்குள்ள கதிர் அடிக்கும் களங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.