/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் வேதனை: அரசு பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
/
விவசாயிகள் வேதனை: அரசு பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் வேதனை: அரசு பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் வேதனை: அரசு பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
ADDED : ஏப் 08, 2025 05:51 AM

சாத்துார் பகுதியில் கண்மாய் பாசனத்தின் மூலம் விவசாயிகள் நெற் பயிர் செய்துள்ளனர். மேலும் கிணற்று பாசனத்தின் மூலம் தோட்டப் பயிராக மிளகாய் ,கொத்தவரங்காய் உள்ளிட்ட பயிர்களையும் மானாவாரியில் சோளம் ,உளுந்து உள்ளிட்ட பயிர்களையும் விதைத்துள்ளனர்.
சாத்துார் பகுதியில் விவசாயிகள் பெரிய கொல்லப்பட்டி மற்றும் என் .மேட்டுப்பட்டி,பாப்பாக்குடி வேலக்கரந்தை கலிங்கமேட்டுப்பட்டி இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் விளைவித்து உள்ளனர். கோடை மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களையும் வயல்களை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.கனமழையாக பெய்து வரும் கோடை மழையால் பல பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
வயல்வெளி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் விவசாயிகளால் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. தொடர்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் விளைந்த நெல் மீண்டும் முளைவிட்டு விடும் அபாயம் உள்ளது.
ஏக்கருக்கு ரூ 45 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் அறுவடை சமயத்தில் பெய்து வரும் கோடை மழையால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மிளகாய் விளைவித்துள்ள விவசாயிகளும் இந்த கோடை மழை காரணமாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.போதுமான வெயில் அடிக்காததால் விளைந்த மிளகாய் வத்தல்கள் சோடை யாகி போன நிலையில் உள்ளன.
ராஜபாளையம் பகுதியிலும் மா மரங்கள் தற்போது பூ பூத்து காய் காய்க்கும் பருவத்தில் கோடை மழை காற்றுடன் பெய்வதால் பூக்களும் மாபிஞ்சும் உதிர்ந்து காய் காய்ப்பது பாதிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் எதிர்பார்த்த நேரத்தில் மழை பெய்யாமல் கோடை காலத்தில் அறுவடை சமயத்தில் பெய்து வரும் மழையால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
என்.மேட்டுப்பட்டி விவசாயி தனுஷ்கோடி கூறியதாவது: நெற்பயிரை அறுவடை செய்ய நிலம் சற்று காய்ந்திருக்க வேண்டும் அப்போதுதான் அறுவடை மெஷினை இயக்க முடியும் தற்போது பெய்த கோடை மழையால் நெற்பயிர் விளைந்த விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் அறுவடை மெஷினை இயக்க முடியாது. இதனால் மீண்டும் நெற்பயிர் முளைத்து விடும் நிலை உள்ளது.அரசு பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.