sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த கோரி முகமூடி அணிந்து விவசாயிகள் தர்ணா குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு

/

காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த கோரி முகமூடி அணிந்து விவசாயிகள் தர்ணா குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு

காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த கோரி முகமூடி அணிந்து விவசாயிகள் தர்ணா குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு

காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த கோரி முகமூடி அணிந்து விவசாயிகள் தர்ணா குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு


ADDED : டிச 28, 2024 05:29 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிதொல்லையை கட்டுப்படுத்தக் கோரியும், வனவிலங்கு பட்டியலில் அகற்ற மாநில அரசுக்கு பரிந்துரைத்து தீர்மானம் போட வலியுறுத்தியும், காட்டுப்பன்றிமுகமூடி அணிந்து விவசாயிகள் போராட்டம் செய்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றுவதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ், வேளாண் இணை இயக்குனர் விஜயா, நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி இந்தாண்டு காட்டுபன்றியால் ஏற்பட்ட சேதம் குறித்து கோஷமிட்டனர். ராஜபாளையம் விவசாயிகள் காட்டுபன்றி முகமூடி அணிந்து முழங்கினர். மாவட்ட நிர்வாகம் வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுபன்றியை நீக்க மாநில அரசுக்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரினர்.

ஜெயசீலன், கலெக்டர்: 2015 முதல் 2024 நவ. 26 வரை 475 விவசாயிகள் காட்டுபன்றி பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.31, 92,215 இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஏப்.1 முதல் நவ. 21 வரை மட்டும் 102 இடங்களில் விளைநிலங்கள் சேதமாகி உள்ளன. கண்மாய்கள், நீர்நிலைகளில் சீமை கருவேல மரங்கள் காட்டுபன்றிகள் வாழ்வதற்கு ஏற்ற வசிப்பிடமாக உள்ளதால் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்து பயிர் சேதம் அதிகமாக ஏற்படுகிறது.

விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் 75 சதவீத அரசு மானியத்துடன் கூடிய சூரிய மின் வேலி அமைப்பதன் மூலம் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க முடியும். இவ்வாறு தலைமை செயலாளர் முருகானந்தத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மாவட்ட அமைச்சர்களும் இது குறித்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என கோஷமிட்டனர். விவசாய சங்கங்களை அழைத்து தீர்மானம் நிறைவேற்ற வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கம்: கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை விரைந்து பெற்றுத்தர வேண்டும். கரும்பு அரவைக்கு எந்த ஆலைக்கு அனுப்புவது என்பது குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். செண்பகத்தோப்பில் டிரெக்கிங் செல்வதால் வனவிலங்குகள் விளைநிலங்களை நோக்கி படையெடுக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

விஜயா, வேளாண் இணை இயக்குனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையம் கொத்தன்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் பகுதிகளை நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குப்பையை கொட்டாமல் நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். அதே போல் கொத்தன்குளம் கண்மாய்க்கான மீன்பாசி குத்தகையை விவசாயிகள் சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.

பாலகணேசன், தென்னை விவசாயிகள் சங்கம்: ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனை பொது சேகரிப்பு மையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

ஜெயராமன், ராஜபாளையம்: பொதுப்பணித்துறை கண்மாய்களுக்கு பெயர் வைக்க வேண்டும்.

நிறைகுளம், ஸ்ரீவில்லிபுத்துார்: பொன்னாங்கண்ணி கண்மாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. அகற்ற வேண்டும்.

அப்போது நீர்வளத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற தாமதிப்பதை கலெக்டர் கண்டித்தார்.

கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் பாசன ஆயக்கட்டு பரப்பில் வாடியூர் கிராமத்தின் 300 ஏக்கருக்கு விவசாய நிலங்களை சேர்க்க வேண்டும். கன்னிசேரியில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: வெம்பக்கோட்டை கண்மாயில் இருந்து கொல்லப்பட்டி கண்மாய்க்கு உள்ள வரத்து கால்வாயை துார்வார வேண்டும்.

அம்மையப்பன், சேத்துார்: கால்நடை கணக்கெடுப்பை முழுமையாக நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க முன்வர வேண்டும்.

அப்போது பதிலளிக்க கூட்டத்திற்கு மாவட்ட நிலை அலுவலர் ஒருவர் வராததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, இனி வரும் கூட்டங்களில் அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களையும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டும் என கோரினர்.

ஞானகுரு, ஸ்ரீவில்லிபுத்துார்: மம்சாபுரம், வாழைக்குளத்தில் நெல், தேங்காய் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். மா பழக்கூழ் ஆலை அமைக்க வேண்டும்.

நாச்சியார் அம்மாள், நேர்முக உதவியாளர்: உற்பத்தி அதிகமாகும் பட்சத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் பற்றி கூற வேண்டும்.

இதற்கு அதிகாரிகள் சம்மந்தமில்லாத பதில் தந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இனி வரும் கூட்டங்களில் மனுக்களுக்கான பதிலை தபாலாக அனுப்பவும், தொடர்புடைய பதில் மட்டும் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

கண்ணாயிரம், விருதுநகர்: வேளாண் உபகரணங்களை விளைநிலங்களில் இறக்க வருவோர் போக்குவரத்து செலவுக்கு என பணம் கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

சரவணன், ராஜபாளையம்: பெரியாதி குளம் கண்மாயின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

ஓ.ஏ.நாராயணசாமி, தமிழ்விவசாயிகள் சங்கம்: சிவகாசி எம்.துரைச்சாமிபுரத்தில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

லெட்சுமணப்பெருமாள், திருச்சுழி: வடபாலை நெல் பெயர் பெற்றது. தற்போது கண்மாய் மடை சேதத்தால் விவசாயம் செழிப்பு இழந்துள்ளது. இதை சீரமைத்து விவசாயத்தை மீட்டுத்தர வேண்டும்.

செல்வம், திருச்சுழி: பரளச்சி பெரிய கண்மாயை துார்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us