/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூமாபட்டியில் வறண்ட கண்மாய்கள் கவலையில் விவசாயிகள்
/
கூமாபட்டியில் வறண்ட கண்மாய்கள் கவலையில் விவசாயிகள்
கூமாபட்டியில் வறண்ட கண்மாய்கள் கவலையில் விவசாயிகள்
கூமாபட்டியில் வறண்ட கண்மாய்கள் கவலையில் விவசாயிகள்
ADDED : ஜூலை 26, 2025 03:20 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டியை சுற்றியுள்ள பல்வேறு கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியான கூமாபட்டியை சுற்றி பெரியகுளம், விராக சமுத்திரம், கொடிக்குளம், பூரிப்பாறை, பாதரங்குளம் உட்பட பல்வேறு கண்மாய்கள் உள்ளது. இப்பகுதியில் கன மழை பெய்து கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டால் கடல் போல் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும்.
கூமாபட்டி, அத்தி கோயில், கான்சாபுரம் பகுதிகளில் உள்ள வயல்களில் ஒரு பக்கம் கிணற்று பாசனம் இருந்தாலும், பிளவக்கல் அணை தண்ணீரையும், கண்மாய் தண்ணீரையும் நம்பி பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பெரியகுளம், விராக சமுத்திரம், கொடிக்குளம் உட்பட பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வறண்டு வருகிறது. இதனால் கண்மாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.