/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதையில் மகன் தகராறு கொன்ற தந்தை கைது
/
போதையில் மகன் தகராறு கொன்ற தந்தை கைது
ADDED : அக் 02, 2024 02:05 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் பொம்மயநாயக்கர் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் ராமசாமி, 74. இவரது மனைவி கிருஷ்ணம்மாள் ராணி, 65. இவர்களுக்கு மகன்கள் வெங்கட்ராமன், 44, சுப்பிரமணி, 34, மகள் சுப்புலட்சுமி, 40, உள்ளனர்.
வெங்கட்ராமன், சுப்புலட்சுமி திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். சுப்பிரமணிக்கு திருமணமாகாத நிலையில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, குடிபோதையில் தகராறு செய்ததால் மகன் சுப்பிரமணியை, ராமசாமி அடித்துக் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினார்.
போலீசார் கூறியதாவது:
மதுப்பழக்கத்திற்கு ஆளாகி, பெற்றோரிடம் மகன் சுப்பிரமணி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவும், அவர் தகராறு செய்தார். மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், துாங்கிய சுப்பிரமணியை கட்டை, அரிவாள் மனையால் தாக்கிக் கொலை செய்தார். அவரை கைது செய்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.