/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான வடிகால் சிலாப்களால் அச்சம்
/
சேதமான வடிகால் சிலாப்களால் அச்சம்
ADDED : அக் 10, 2024 05:22 AM

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு முன்புறம் உள்ள பஸ் ஸ்டாப்பில் வடிகால் சிலாப்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பயணிகள் காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கும், வளாகத்தில் உள்ள மற்ற துறை அலுவலகங்களுக்கும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள், பிற மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தங்கள் வேலை முடிந்ததும் பஸ்சிற்காக வளாகத்திற்கு முன்புறம் நான்கு வழிச்சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பஸ் ஸ்டாப்பில் உள்ள வடிகால் மீது அமைக்கப்பட்ட சிமென்ட் சிலாப்கள் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமான சிலாப்களை குறிக்கும் வகையில் எவ்வித தடுப்புகள் சுற்றி வைக்கப்படவில்லை.
இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள், ஊழியர்கள் அவசரமாக எழுந்து செல்லும் போது தெரியாமல் கால் வைத்து விட்டால் வடிகால் உள்ளே விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சேதமான சிலாப்களால் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.
எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தின் பஸ் ஸ்டாப்பில் இடியும் நிலையில் உள்ள சிலாப்களை சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.