/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வரும் வாகனங்களால் அச்சம் ; விபத்துக்களை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை அவசியம்

ADDED : அக் 19, 2025 06:10 AM

விருதுநகர் மாவட்டத்தின் வழியாக மதுரை- -தூத்துக்குடி, மதுரை- - கன்னியாகுமரி, திருமங்கலம்- -ராஜபாளையம் நான்கு வழி சாலைகள் உள்ளது. இவற்றின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் அதிகளவில் பயணித்து வருகின்றது.
இதில் ஒரே திசையில் வாகனங்கள் பயணிக்கும் நிலையில் கூட தற்போது அதி வேகத்தில் வரும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகி எதிர் திசையில் பறந்து போய் விபத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தூத்துக்குடி , நாகர்கோவில் நான்கு வழி சாலைகளில் பல்வேறு கிராமப்புற ரோடுகள் இணையும் சந்திப்பு பகுதிகளில் மேம்பாலங்கள் இல்லாததால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமங்கலம்-- ராஜ பாளையம் நான்கு வழிச் சாலையில் பல இடங்களில் கிராமத்து மக்கள் விபத்தில் சிக்காத வகையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெருக்கடியினால் டூவீலர்கள், ஆட்டோக்கள், கார்கள், அரசு பஸ்கள் உட்பட பல்வேறு கனரக வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி நான்கு வழிச்சாலைகளில் எதிர் திசையில் பயணித்து வருகிறது.
மேலும் சாலையோர ஓட்டல்களில் உணவு சாப்பிடுவதற்காக ஏராளமான டிராவல்ஸ் பஸ்கள் எதிர்திசையில் பயணிக்கும் நிலையும் காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இரவு உணவிற்காக சென்னை செல்லும் ஏராளமான ஆம்னி பஸ்கள் எதிர் திசையில் பயணித்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அச்சங்குளம், கடம்பங்குளம், முத்துலிங்கபுரம், பூவாணி போன்ற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான டூவீலர்கள், மினி வேன்கள் எதிர்த்திசையில் பயணிக்கின்றனர். இதனால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.
எனவே, மாவட்டத்தின் அனைத்து நான்கு வழிச்சாலைகளிலும் எதிர் திசையில் வாகனங்கள் பயணிப்பதை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.