/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிப்.24,25,26ல் ஆண்டாள் கோயில் தெப்ப உற்ஸவம்
/
பிப்.24,25,26ல் ஆண்டாள் கோயில் தெப்ப உற்ஸவம்
ADDED : பிப் 04, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எட்டு வருடங்களுக்கு பிறகு மாசி தெப்ப உற்ஸவம் பிப்.,24,25,26 மூன்று நாட்களில் நடக்கிறது.
கடந்த நவ., டிச., மாதம் பெய்த கனமழையால் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து மாசி பவுர்ணமியை முன்னிட்டு தெப்ப உற்ஸவத்தை நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பிப்., 24,25, 26 மூன்று நாட்களில் தினமும் இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை தெப்ப உற்ஸவத்தை நடத்த உள்ளதாக செயல் அலுவலர் முத்துராஜா தெரிவித்தார்.