ADDED : ஜூலை 16, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பொறியியல் துறை கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.
சென்னை விபாதி லேப்ஸின் இணை துணைத் தலைவரும் கல்லுாரி முன்னாள் மாணவர் கற்குவேல் ராஜா தங்க மாரியப்பன் தலைமை வகித்தார்.
2025 -- 26ம் கல்வி ஆண்டிற்கான கூட்டமைப்பின் மாணவர் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர்.
விபாதி வெப்சின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்லமுத்து,இணை தொழில்நுட்ப ஆலோசகர் நிதி சங்கர் ஆகியோர் ஆரக்கள் அபாக்ஸின் செயல்முறைகள் குறித்து பேசினர். முதல்வர் காளிதாச முருகவேல் பேராசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.