நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : ஒடிசா மாநிலம் பதுரக் மாவட்டத்தின் சனவலிக் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் 24. இவர் மனைவி ஜோரணா 20. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் இருவரும் ராஜபாளையம் அருகே நுாற்பாலையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
ஜோரணாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பிப். 11 ல் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பிப். 12 அதிகாலை 5:45 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பலியானார்.