நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: திருமங்கலம் - கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாளத்தில் 55 வயதுடைய அடையாளம் தெரியாத பெண் ஆக. 30ல் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இவர் ராமர் பச்சை நிற ஜாக்கெட், அடர் பச்சையில் ரோஸ் கலர் பூ போட்ட சேலை அணிந்திருந்தார். இவரின் வலது கையில் வடமொழி ஓம் பச்சை குத்தப்பட்டு, இடது முன்னங்கையில் அறுவை சிகிச்சை காயத்தழும்பு, வலது தோள்பட்டை முன்புறம் ஒரு மச்சம் உள்ளது. தகவல் தெரிந்தவர்கள் 04562 243 082 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என விருதுநகர் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.