/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்வழிப்பாதையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேலி, சி.சி.டி.வி.., கேமரா அமைப்பு
/
நீர்வழிப்பாதையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேலி, சி.சி.டி.வி.., கேமரா அமைப்பு
நீர்வழிப்பாதையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேலி, சி.சி.டி.வி.., கேமரா அமைப்பு
நீர்வழிப்பாதையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேலி, சி.சி.டி.வி.., கேமரா அமைப்பு
ADDED : டிச 12, 2024 04:52 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்று நீர் வழிப்பாதையான முடங்கியாற்று பாலம் ஒட்டிய இடத்தில் கழிவுகள் கொட்டி மாசு ஏற்படுத்துவதை தடுக்க அப்பகுதியை சுற்றி வேலி, நவீன கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.,வி.,) அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து அய்யனார் கோயில் ஆறு முடங்கியாற்று பாலம் வழியாக தடுப்பு அமைத்து 10க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு பிரித்து விடப்பட்டு வருகிறது.
முடங்கியாற்று பாலம் ஒட்டி கிருஷ்ணாபுரம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட இடத்தில் குடியிருப்புகளில் சேரும் பல்வேறு கழிவுகள் கொட்டி வந்ததனர். மழைக்காலங்களில் பாலித்தீன், ரசாயன, மாமிச கழிவுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து படத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து குப்பை கிடங்கு பகுதியில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டு தற்போது பாதுகாப்பு வேலியும், கண்காணிப்புக்கு நவீன கேமராவும் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
ராமமூர்த்தி, பி.டி.ஓ.,: கடந்த மாதம் கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்ய கூறியதால் முடங்கியார் ரோடு மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இடத்தை பாதுகாக்கும் பணி தொடங்கியுள்ளதுடன், நவீன கண்காணிப்பு கேமரா அமைத்து, மீறி குப்பை கொட்டுபவர்கள் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.என்றார்.

