/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளி திருவிழா
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளி திருவிழா
ADDED : பிப் 10, 2024 04:19 AM

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாதம் கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று தை கடைசி வெள்ளிக்கிழமை, அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி, தென்காசி, சங்கரன்கோவில், கன்னியாகுமரி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்திருந்தனர்.
அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அம்மனுக்கு பன்னீர், இளநீர், பால், மஞ்சள் , தேன் , பஞ்சாமிர்தம்
உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், ஆயிரம் கண் பானை, செலுத்தியும், பொங்கல் வைத்தும் முடி காணிக்கை செலுத்தியும் ,மா விளக்கு, கை, கால், கண் உருவங்களை தானம் வழங்கியும், காது குத்தியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, இந்து சமயஅறநிலைத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. வினோஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.