UPDATED : நவ 21, 2026 07:40 PM
ADDED : நவ 21, 2026 07:40 PM
விருதுநகர்: திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 4ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காள் பட்டியல் குறித்து கண்காணிப்பு அலுவலர் சிவஞானம் தலைமையில் கலெக்டர் ஷரண்யா அறி முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் 2027 ஜன. 1ஐ தகுதி நாளாக கொண்டு தகுதியுடைய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை அறிவித்துள்ளது.
மக்களின் வசதிக்காக இன்றும் (நவ. 22), நவ. 29ல் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. மேலும் கோரிக்கைகள், ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான டிச. 11 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் கள விசாரணை, தேவைப்படும் இடங்களில் வீடு வீடாக சென்று விசாரணை செய்யப்படும்.
விசாரணை, சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியுடையவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, ஜன 4ல் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
